புகார் பெட்டி செய்தி எதிரொலியால் புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது

Update: 2022-08-10 14:01 GMT
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அருகே மேலவாஞ்சூர் ரவுண்டானா -பனங்குடி இடையே ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் இருந்தது. இதன்காரணமாக மின்கம்பம் வலுவிழந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் சூழல் இருந்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மின்கம்பம் உள்ள பகுதியை அச்சத்துடன் கடந்து சென்று வந்தனர். இதுகுறித்து "தினத்தந்தி" புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் சேதமடைந்த மின்கம்பம் அகற்றப்பட்டு புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" நாளிதழுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்