நாகை ஒன்றியம் சிக்கல் ஊராட்சி மேலக்கரையிருப்பு செல்லும் சாலையில் பெரியாச்சி தோப்பு பகுதியில் இரும்பினால் ஆன மின்கம்பம் ஒன்று உள்ளது. தற்போது இந்த மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் மின்கம்பம் உள்ள பகுதியை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.