திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா பழையனூர் ஊராட்சி வடகட்டளை கானூர் பகுதியில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் மரக்கிளைகளில் மின்கம்பிகள் சிக்கி அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மேலும், கனரக வாகனங்கள், அறுவடை எந்திரங்கள் அந்த வழியாக செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதன் காரணமாக விவசாய பணிகள் பாதிப்படைகின்றன. அதுமட்டுமின்றி, மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் மேற்கண்ட பகுதியை வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?