திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்லம் போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலையம் அருகே சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. வடபாதிமங்கலத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு தினமும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என ஏராளமானோர் சென்று வருகின்றனர். இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.