திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆட்டுர் சாலையில் ஏராளமான பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் மின்மாற்றி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பங்கள் சிதிலமடைந்து எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்மற்றி முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய மின்கம்பத்துடன் மின்மாற்றியை அமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.