காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் மாணிக்க நகரில் பல ஆண்டுகளாக தெருக்களில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் தொடர்பு இல்லாமல் துண்டு துண்டாக நிறுத்த பட்டுள்ளன. இதனால் ஆங்காங்கே கழிவுநீர் சாலைகளிலும், அருகிலுள்ள காலியிடங்களிலும் தேங்கி நிற்கின்றன. அதேபோல் நீண்ட நாட்களாக மின்கம்பங்கள் பழுதடைந்த நிலையிலும், மின்கம்பிகள் வெளியே தெரியும் அளவிலும், தாழ்ந்த நிலையில் இருப்பதால் விபரீதம் விளையக்கூடும். சம்பந்தப்பட்ட துறைகள், மேற்கண்ட பிரச்சினைகளை கள ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும்.