சாத்தான்குளம் அருகே திருவரங்கநேரி- செட்டிகுளம் சாலையில் உள்ள மின்மாற்றியின் இரு மின்கம்பங்களும் சேதமடைந்த நிலையில் உள்ளன. அந்த மின்கம்பங்களில் சிமெண்டு பூச்சுகள் முழுவதும் பெயர்ந்து விழுந்து எலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது. இதனால் பலத்த காற்றில் மின்மாற்றி சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.