சரிந்த நிலையில் மின்கம்பம்

Update: 2022-10-26 15:45 GMT

திருவேங்கடம் அருகே கலிங்கப்பட்டி பஞ்சாயத்து முத்துலட்சுமிபட்டிக்கு செல்லும் சாலையோரத்தில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து சரிந்த நிலையில் உள்ளது. மேலும் மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் வகையில் உள்ளது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்