சென்னை விம்கோ நகர் சான்கோ சி.எப்.எஸ் அருகே சக்திபுரம் மெயின்ரோட்டில் மின் இணைப்பு பெட்டி ஒன்று உள்ளது. இதன் அருகே இருக்கும் குடிநீர் குழாயில் இருந்து குடிநீர் வெளியேறி சாலையோரத்திலும் மின் இணைப்பு பெட்டி அருகிலேயும் தேங்கிய நிலையில் உள்ளது. இந்தநிலை தொடர்வதால் குடிநீர் வீணாவதுடன், மின் இணைப்பு பெட்டி அருகே நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து இதற்கொரு நிரந்தர தீர்வு காண வேண்டும்.