புதிய மின்கம்பம் வேண்டும்

Update: 2022-09-17 11:23 GMT

நாகையில் இருந்து நன்னிலம் செல்லும் சாலையில் புத்தகரம் பாதையில் 2 மின்கம்பங்கள் உள்ளன. இந்த மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன்காரணமாக மின்கம்பங்கள் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அந்த பகுதியை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்