புகார் பெட்டி எதிரொலி

Update: 2022-08-22 11:25 GMT

திருக்கோவிலூர் தாலுகா கூவனூர் ஊராட்சி மெலாரிப்பட்டு கிராமம் வடகிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் உயரழுத்த மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக சென்றன. இதனால் அங்கு மின் விபத்து ஏற்படும் அபாயம் உருவானது. இதுகுறித்த செய்தி படத்துடன் தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் அந்த மின்கம்பியை உயர்த்தி கட்டி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்