காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் போஜகரா தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து உள்ளது. மின் கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்தும் அபாயகரமாக காட்சி தருகிறது. எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு இந்த மின்கம்பத்தை சரி செய்ய மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்குமா?