மயிலாடுதுறை மாவட்டம் திருமணஞ்சேரி கோவிலுக்கு எதிரே மின்மாற்றி ஒன்று உள்ளது. இந்த மின்மாற்றியின் மூலம் அந்த பகுதியில் உள்ள வீடுகள், கடைகள் உள்ளிட்டவை மின்சாரம் பெறுகின்றன. இந்த மின்மாற்றி அமைத்து நீண்ட நாட்கள் ஆகியுள்ளதால் அடிக்கடி பழுதடைகிறது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், குழந்தைகள், முதியவர்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பழைய மின்மாற்றியை அப்புறப்படுத்திவிட்டு புதிய மின்மாற்றி அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.