நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய ெநடுஞ்சாலையில் இருந்து ஆசிரமம், ஈத்தங்காட்டை இணைக்கும் புறவழிச்சாலை உள்ளது. இந்த புறவழிச்சாலை அமைந்து 13 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இதுவரை இந்த சாலையோரத்தில் மின்விளக்குள் அமைக்கப்படவில்லை. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரத்தில் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை வேண்டும்.