புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சி, அண்ணாநகரில் இருந்து காமராசபுரம் சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் கீழே விழுவதுபோல் காணப்படுகிறது. சாலையில் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.