கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 1957-ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக தனியார் மற்றும் அரசு பஸ்கள், லாரிகள், கார்கள், வேன்கள், டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில் இந்தப் பாலத்தில் நெடுகிலும் மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தில் போடப்பட்டுள்ள மின் விளக்குகள் பழுதடைந்து பல மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இந்த பாலத்தின் வழியாக செல்லும்போது இருள் சூழ்ந்துள்ளது. இதனால் இருசக்கர வாகனங்கள் மற்றும் பல்வேறு வாகனங்கள் பாலத்தில் இருக்கும் குழிகள் தெரியாமல் இருட்டில் குழி மீது விட்டு நிலை தடுமாறி செல்கின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.