சென்னை மணலி திருவேங்கடம் தெரு மெட்ரோ வாட்டர் அலுவலகம் அருகே மின்கம்பத்தில் மின்விளக்கு கடந்த சில நாட்களாக எரிவதில்லை. வயர்களும் துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. இரவு நேரங்களில் போதிய வெளிச்சமில்லாததால் இருள் சூழ்ந்து கிடக்கிறது. மின்வாரியம் கவனித்து நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும்.