சென்னை நுங்கம்பாக்கம் கிரமா தெருவில் உள்ள மின்விளக்குகளுக்கு இடையே அதிகப்படியான இடைவெளி விட்டு வைக்கப்பட்டுள்ளன. இதனால் தெருக்களில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்த நிலையில் உள்ளது. தெருவை கடக்க போதிய வெளிச்சமில்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறார்கள். சம்பந்தப்பட்ட துறை கவனித்து இப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி இதற்கொரு நிரந்தர தீர்வு காண வேண்டும்.