அம்மையநாயக்கனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராஜதானிகோட்டையில் வீட்டின் மேற்கூரையை உரசியபடி மின்கம்பிகள் செல்கின்றன. இதனால் மழைக்காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் இப்பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. எனவே மின்கம்பிகளை சரிசெய்வதுடன், சாக்கடை கால்வாய் அமைக்க சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.