காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் அமைந்துள்ள திரையரங்கம் பின்புறம் உள்ள திருமலை நகரில் தெருவிளக்கு எரியாமல் உள்ளது. இதனால் மாலை நேரத்தில் கூட இந்த பகுதி இருள் சூழ்ந்தே காணப்படுகிறது. மேலும் வேலை முடிந்து இரவில் வீடு திரும்புபவர்கள் இருளில் நடந்து செல்லும் சூழல் ஏற்படுகிறது. இந்த பகுதியில் மீண்டும் மின் விளக்கு எரிவதற்கு மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.