சென்னை புதிய வண்ணாரப்பேட்டை தேசியா நகர் 4-வது தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் உள்ளது. இது மழை காலம் என்பதால் திறந்திருக்கும் மின் இணைப்பு பெட்டியில் மின் கசிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே திறந்த நிலையில் இருக்கும் மின் இணைப்பு பெட்டியை சரி செய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?