கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகில் இருந்து திருவேணி சங்கமம் கடற்கரைக்கு செல்லும் சாலையோரம் மின் இணைப்பு பெட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு மின் இணைப்புக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த பெட்டி மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் அந்த பெட்டி சரிந்து விழுந்து அந்த வழியாக செல்வோர் மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்இணைப்பு பெட்டியை அகற்றி விட்டு புதிய பெட்டியை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.