வீடுகளின் மேல் மின்கம்பிகள்

Update: 2022-08-18 14:29 GMT

வீடுகளின் மேல் மின்கம்பிகள்

திருப்பூர் முதலிபாளையம் ஊராட்சி வட்டக்காட்டுபுதூரில் பல ஆண்டுகளாக குடியிருப்பு பகுதிகளின் மேல் உயர்மின்அழுத்த பாதையும் தாழ்வழுத்த மின்பாதையும் செல்கிறது. இதனால் விபத்துக்கள் அதிகம் நடக்க வாய்ப்புள்ளது. இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து கூறியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஆகவே இதற்கு சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின்கம்பிகளை வேறு பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

பாண்டியன், முதலிபாளையம்

7871920101

மேலும் செய்திகள்