மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும்

Update: 2022-08-18 12:45 GMT
நாகை மாவட்டம் திருமருகல் - திட்டச்சேரி சாலையின் வழியா தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பனங்குடி பிராவடையான் ஆற்றுப்பாலம் அருகில் சாலையோரத்தில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதன் காரணமாக அந்த வழியாக கனரக வாகனங்கள் மற்றும் விவசாய அறுவடை எந்திரங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு சில மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் இருப்பதாலும், மின்கம்பிகள் தாழ்வாக செல்வதாலும் அந்த பகுதியை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்