மின் விளக்கு அமைக்கப்படாத பாலம்

Update: 2022-08-18 12:20 GMT
கரூர்-ஈரோடு செல்லும் நெடுஞ்சாலையில் நொய்யல் குறுக்குசாலையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே கடந்த சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக ஏராளமான தனியார் மற்றும் அரசு பஸ்கள், லாரிகள், கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் இந்த பாலத்தில் இதுவரை மின்விளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் இருளில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்