மதுரை மாவட்டம் 62- வது வார்டு அம்பலக்காரர் தெருவில் உள்ள தெருவிளக்குகள் பல நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் எரியாமல் உள்ள மின்விளக்குகளை சரி செய்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.