தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டில் மின் இணைப்பு பெட்டி ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் இந்த பெட்டி திறந்த நிலையில் காணப்படுகிறது. அதன் அருகே தினமும் சிறுவர்கள் விளையாடுவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பு பெட்டியை சீரமைத்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-திருமால், மாரண்டஅள்ளி, தர்மபுரி.