அழகப்பபுரம் பேரூரட்சிக்கு உட்பட்ட கொல்லம்பட்டறையில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையோரம் சேதமடைந்து காணப்பட்டது. அந்த இடத்தில் புதிய மின்கம்பம் நடப்பட்டும் பழைய மின்கம்பம் அகற்றப்படவில்லை. இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
ஜஸ்டின், அழகப்பபுரம்.