சென்னை பொத்தூர் பம்மதுகுளம் ஸ்ரீ சாய் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளை ஒட்டி ஆபத்தான முறையில் மின்சார வயர்கள் செல்கின்றன. இதனால் வீட்டு மாடியில் குழந்தைகளை விளையாட விடுவதற்கும், வயதானவர்கள் அமருவதற்கும் அச்சமாக உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படும் முன்பு மின்சார வாரியம் கவனித்து இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.