சிக்னல் அமைக்கும் பணி தாமதம்

Update: 2022-06-27 14:54 GMT
செங்கல்பட்டு மாவட்டம்
தாம்பரம் பகுதியில் இருக்கும் செம்பாக்கம் பஸ் நிருத்தம் அருகே போக்குவரத்துக்கான சிக்னல் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் அந்த பணி முழுமை அடையாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால்
பள்ளி மாணவர்களும், வாகன ஓட்டிகளும் சாலையை கடந்து செல்வதில் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கிறார்கள். எனவே பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி போக்குவரத்து சிக்னல் அமைக்கும் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்