சென்னை மடிப்பாக்கம் மயிலை கபாலீஸ்வரர் நகர் முதல் தெருவில் உள்ள மின் கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தும் ஆபத்தாக காட்சி தருகிறது. இதனால் எந்த நேரத்திலும் இந்த மின் கம்பம் உடைந்து கீழே விழ அதிகமாக வாய்ப்பு உள்ளது. எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மின்கம்பத்தை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?