கடலூர் வேணுகோபாலபுரம் சாலையில் இருந்து நேரு நகர் செல்லும் சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து எலும்புக்கூடு போல் காணப்படுகிறது. எந்நேரமும் உடைந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ள அந்த மின்கம்பம் இருக்கும் பகுதி வழியாக செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் அந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.