திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அரவிந்த் நகரில், குடியிருப்போர் நல சங்கம் சார்பில் மின்சார வாரியத்தால் டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்காக கம்பங்கள் நிறுத்தப்பட்டன. ஆனால் பல மாதங்கள் ஆகியும் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்படாமலேயே உள்ளது. இதனால் எங்கள் பகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. எனவே டிரான்ஸ்பார்மர் அமைக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்குமா?.