ஒரு இடம்; இரண்டு பிரச்சினைகள்

Update: 2022-06-21 15:10 GMT

சென்னை குன்றத்தூர் நல்லீஸ்வரர் நகர் விரிவாக்க பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. ஆனால் தண்ணீர் வந்தபாடில்லை. குழாய் இருக்கிறது, குடம் இருக்கிறது, ஆனால் தண்ணீர் மட்டும் வரவே இல்லை. மேலும் தெரு விளக்கு இல்லாமல் நீண்ட நாட்களாக அவதிப்படுகிறோம். கடந்த வாரம் கூட இரவு நேர பயணத்தின் போது பாம்பு ஒன்றை எங்கள் பகுதி மக்கள் அடித்துள்ளனர். இன்னும் எவ்வளவு நாள் தான் ஆபத்து நிறைந்த பயணத்தை நாங்கள் மேற்கொள்வது. எங்கள் குரலுக்கு பதில் கிடைக்குமா?

மேலும் செய்திகள்