சென்னை ஜமாலியா பகுதியில் உள்ள மங்களபுரம் சி.ஒய்.எஸ். சாலையில் மின்சார கேபிள் ஒன்று ஆபத்தான முறையில் கிடக்கிறது. தெருமக்கள் நடக்கும் பாதையில் இந்த கேபிள் கிடப்பதால் அசம்பாவிதம் ஏற்படுமோ என்று அச்சமாக இருக்கிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி மின்சார கேபிளை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.