அரியலூர் மாவட்டம், அயன்ஆத்தூர் கிராமம் தெற்கு தெருவில் பல குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பல மாதங்களாக குறைந்த மின்னழுத்த மின்சாரமே வருகிறது. இதனால் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டி, மின் மோட்டார், மின் விசிறி போன்ற வீட்டு உபயோக பொருட்கள் சரியாக இயங்காமல் பழுதடைந்து வருகிறது. 4 மாதங்களுக்கு முன்பே எங்கள் பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்க உபகரணங்களை கொண்டு வந்து இறங்கி உள்ளனர். ஆனால் புதிய மின் கம்பங்கள் மட்டும் நட்டு உள்ளனர். மற்ற பணிகள் இன்னும் தொடங்கவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.