செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் பாலாற்று பாலத்தின் வழியாக மதுராந்தகம், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளுக்கு கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் இந்த பாலத்தில் இருக்கும் மின் விளக்குகள் எரியாத காரணத்தினால், இரவு நேரத்தில் இந்த சாலையில் வாகனத்தில் செல்லவே அச்சமாக இருக்கிறது. விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதால், பழுதடைந்த மின் விளக்குகளை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.