சென்னை மாதவரம் ராஜா நகரில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இணைப்பு பெட்டி சரிந்த நிலையில் கீழே தரையில் கிடப்பது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. மின்சார வாரியத்தின் துரித நடவடிக்கையால் பிரச்சினை சரி செய்யப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் நடவடிக்கை எடுத்த மின்சார வாரியத்துக்கும் செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் பாராட்டை தெரிவித்தனர்.