செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கம் வினைதீர்த்த வேலவன் தெருவில் இருக்கும் கடைசி மின்கம்பமானது கடந்த 2 மாதமாக பழுதடைந்து உள்ளது. இதனால் லேசான காற்றுக்கே கீழே விழுந்து விடும் நிலையில் உள்ளது. இவ்வாறு விழுந்தால் அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதி மேல் தான் விழும். அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.