திருக்கனூர் கடைவீதியில் பெட்ரோல் பங்க் எதிரே உள்ள உயர்கோபுர மின்விளக்கு நீண்ட நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் கடைவீதி இருளில் மூழ்கி காணப்படுகிறது. பழுதடைந்த மின்விளக்கை சரிசெய்து எரியவைத்தால் பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் நன்றாக இருக்கும்.