செங்கல்பட்டு மாவட்டம் சிட்லப்பாக்கம் 2-வது பிரதான சாலையில் உள்ள மேம்பாலத்தில் இருந்த மின் விளக்குகள் பல மாதங்களாக எரியாமல் இருப்பது குறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் சுட்டிக்காட்டப்பட்டது. மின் வாரியத்தின் சீரிய முயற்சியால் பழுதடைந்த மின்விளக்குகள் ஒளிர்விட தொடங்கியுள்ளது. துரிதமாக செயல்பட்ட மின்வாரியத்துக்கும் , துணைபுரிந்த 'தினத்தந்தி'க்கும் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.