திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் குப்பம் பகுதியில் உள்ள பள்ளியில் மின்கம்பம் பழுதடைந்திருப்பது குறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. மின்வாரிய அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் பழுதடைந்த மின்கம்பம் சரி செய்யப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் உடனடி நடவடிக்கை எடுத்த மின் வாரியத்துக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் பாராட்டை தெரிவித்தனர்.