செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் ரெயில்வே கேட் அருகே உள்ள நெடுஞ்சாலையில் மின்சார வயர்கள் ஆபத்தான முறையில் தாழ்வாக தொங்கி கொண்டிருக்கிறது. இந்த வயர்கள் அந்த சாலையில் செல்லும் வாகனங்களின் மேல் பகுதியில் உரசி செல்லும் சம்பவங்கள் தினமும் நடக்கிறது. சரக்கு வாகனங்கள் இரும்பு கம்பிகள் எடுத்து செல்லும் போது அசம்பாவிதங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.