கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இருந்து முக்கடலும் சங்கமிக்கும் திருவேணி சங்கம் கடற்கரைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் இணைப்பு பெட்டி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள், சிறுவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த பெட்டியை அகற்றி விட்டு புதிய பெட்டியை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மதி, கன்னியாகுமரி.