மின்விளக்கு ஒளிருமா?

Update: 2022-08-10 13:59 GMT
நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சியில் ஆறுகாட்டுத்துறை உள்ளது. மீனவ கிராமமான இந்த பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. வேதாரண்யத்தில் இருந்து இந்த பகுதிக்கு செல்லக்கூடிய வனதுர்க்கையம்மன் சாலை, சின்னசாலை பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக தெருவிளக்குகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அந்த பகுதியில் உள்ள தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதன் காரணமாக இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தெருவிளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்