மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு ஊராட்சி, மாப்படுகை ஊராட்சி இடையே காவேரி ஆற்றின் குறுக்கே பாலத்துடன் கூடிய இணைப்பு சாலை உள்ளது. இந்த பாலத்தின் அருகில் செல்லும் மின் கம்பிகளில் மண், தூசு படலங்கள் அதிக அளவில் படர்ந்துள்ளது. இதனால் மின் கம்பிகள் சேதமடைய வாய்ப்பு உள்ளது. மேலும் பாலத்தின் அருகில் செல்கிறது. இதனால் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே, தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்யவும், தெருவிளக்குகள் அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.