காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள முத்தமிழ் நகர் பாலகிருஷ்ணா நகரில் இருக்கும் மின்கம்பம் மோசமான நிலையில் சேதமடைந்து உள்ளது. சாய்ந்த நிலையில் இருக்கும் இந்த மின் கம்பம் எந்த நேரத்தில் உடைந்து கீழே விழுமோ என்று அச்சமாக உள்ளது. எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?