நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் அக்கரைப்பேட்டை, வடக்குபொய்கைநல்லூர், தெற்கு பொய்கைநல்லூர் சாலைகளை இணைக்கும் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் வாகன ஓட்டிகளின் நலன் கருதி மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களால மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் மின்விளக்குகள் மீண்டும் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?