சென்னை அடையாறு பகுதியில் இருக்கும் இந்திரா நகர் தண்ணீர் தொட்டி அருகே இருந்த போக்குவரத்து கம்பம் உடைந்து கீழே விழுந்து, போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. மின்வாரியத்தின் துரித நடவடிக்கையால் இடையூறாக இருந்த மின்கம்பம் அகற்றப்பட்டது. உடனடி நடவடிக்கை மேற்கொண்ட மின்வாரியத்துக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் மக்கள் பாராட்டை தெரிவித்தனர்.