காஞ்சீபுரம் மாவட்டம் அய்யப்பன்தாங்கள் கொளுத்திவாஞ்சேரி இ.வி.பி.பிரிவு அவென்யூ, வ.உ.சி தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து உள்ளது. இந்த பழமையான மின்கம்பத்தின் பூச்சுகள் உடைந்து விழுகின்றன. இதனால் மின்கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் இந்த மின்கம்பத்தில் உள்ள மின் விளக்கு எரிவதும் இல்லை. இந்த மின்கம்பத்தின் பயன் தான் என்ன? மின்கம்பத்தை புதுபிக்க மின்வாரியம் வழிவகுக்க வேண்டுகிறோம்.